தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ நெல் சாகுபடி விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கல்

நெல் சாகுபடி விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கல்

நெல் சாகுபடி விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கல்


ADDED : நவ 15, 2024 04:06 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 15, 2024 04:06 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டது.

வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் பயிர் உற்பத்தி திட்டத்தின் கீழ் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், இந்தாண்டு காரைக்கால் பகுதியில் குறுவை பருவத்தில் நெல் சாகுபடி செய்த விவசாயிகளுக்கு உற்பத்தி மானியம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று சட்டசபையில் நடந்தது.

நிகழ்ச்சியில், 794 பொது பிரிவு விவசாயிகளுக்கு 82,77,550 ரூபாய் மற்றும் அட்டவணை பிரிவை சேர்ந்த 121 விவசாயிகளுக்கு 8,81,160 என, மொத்தம் 915 விவசாயிகளுக்கு 91,58,710 ரூபாய் உற்பத்தி மானியத்திற்கான காசோலையை அமைச்சர் ஜெயக்குமார்வழங்கினார்.

நிகழ்ச்சியில், வேளாண் இயக்குநர் வசந்தகுமார், கூடுதல் வேளாண் இயக்குநர் கணேசன் கலந்து கொண்டனர்.

இந்த தொகை நேற்று முதல் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us