/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
முதல்வர் உத்தரவு அமலுக்கு வராததால் சம்பளமின்றி தவிக்கும் பேராசிரியர்கள்

ADDED : செப் 25, 2024 04:06 AM
புதுச்சேரி : முதல்வரின் உத்தரவு அமலுக்கு வராததால், கூட்டுறவு கல்வியியல் கல்லுாரி பேராசிரியர்கள் 14 மாதங்களாக சம்பளமின்றி தவித்து வருகின்றனர்.
புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில், கடந்த 2005-06ம் ஆண்டு கூட்டுறவு துறை மூலம் கல்வியியல் கல்லுாரி துவங்கப்பட்டது. இங்கு ஆண்டிற்கு 100 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். கடந்த 2016 ஆண்டு புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப போதிய கட்டமைப்பு இல்லாததால், மாணவர் எண்ணிக்கை 50 ஆக குறைக்கப்பட்டது. கல்வி கட்டணம் ரூ. 35 ஆயிரத்தில் இருந்து ரூ. 51 ஆயிரமாக உயர்த்தப்பட்டது. இதனால் மாணவர் சேர்க்கை குறைந்து, நிர்வாகத்தின் வருமானமும் குறைந்து சம்பளம் கொடுக்க முடியாமல் ஏற்பட்டது.
கல்லுாரியின் அங்கீகாரம் கடந்த 2021 ஏப்., மாதத்துடன் காலாவதி ஆனதால், முதல்வர் தலையீட்டு கல்லுாரிக்கு தற்காலிக அங்கீகாரம் பெற்று கொடுத்தார்.
கடந்த 2023-24ம் ஆண்டு பட்ஜெட்டில், கூட்டுறவு கல்லுாரி உயர்கல்வி துறையுடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் கல்லுாரி உயர்கல்விதுறை எடுத்து கொள்ள கோப்பு அனுப்பி விட்டதாக கூறி, அங்கு பணியாற்றும் பேராசிரியர்கள், ஊழியர்கள் கடந்த 14 மாதங்களாக சம்பளமின்றி தவித்து வருகின்றனர்.