பதவி உயர்வு கோரி பேராசிரியர்கள்போராட்டம் : மாணவர்கள் ஆதரவு
பதவி உயர்வு கோரி பேராசிரியர்கள்போராட்டம் : மாணவர்கள் ஆதரவு
UPDATED : ஆக 11, 2026 04:56 PM
ADDED : ஆக 11, 2026 04:52 PM
புதுச்சேரி: புதுச்சேரியில் பதவி உயர்வு, நிலுவை தொகை கோரி 8 வது நாளாக நடக்கும் கல்லுாரி பேராசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக மாணவர்களும் களத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநிலத்தில் உள்ள அரசு கல்லுாரி பேராசிரியர்களுக்கு கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படவில்லை. இவர்களுக்கு சேர வேண்டிய நிலுவை தொகையும் தற்போது வரை வழங்கவில்லை. இவர்களுக்கு பதவி உயர்வு, நிலுவை தொகை உடனடியாக வழங்கக் கோரி, அரசிடம் பல முறை முறையிட்டனர். இதை உடனடியாக வழங்க வலியுறுத்தி பேராசிரியர்கள் கடந்த 8 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
காஞ்சி மாமுனிவர் பட்ட மேற்படிப்பு நிறுவன வளாகத்தில் பேராசிரியர்கள் இரவிலும் தங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் இரவு சூறை காற்றோடு பலத்த மழை பெய்தது. இதிலும் பேராசிரியர்கள் போராட்டம் நடத்தினர். மாணவர்களின் கல்வி பாதிப்பதால் அரசு கல்லுாரி பேராசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி அவர்களது போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அரசியல் கட்சியினர், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து பங்கேற்றனர்.
