/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
காலத்தோடு சம்பளம் கிடைக்காததால் பேராசிரியர்கள் அதிருப்தி: ஓராண்டு முன் அனுமதி கொண்டு வர எதிர்பார்ப்பு
/
காலத்தோடு சம்பளம் கிடைக்காததால் பேராசிரியர்கள் அதிருப்தி: ஓராண்டு முன் அனுமதி கொண்டு வர எதிர்பார்ப்பு
காலத்தோடு சம்பளம் கிடைக்காததால் பேராசிரியர்கள் அதிருப்தி: ஓராண்டு முன் அனுமதி கொண்டு வர எதிர்பார்ப்பு
காலத்தோடு சம்பளம் கிடைக்காததால் பேராசிரியர்கள் அதிருப்தி: ஓராண்டு முன் அனுமதி கொண்டு வர எதிர்பார்ப்பு
ADDED : மே 19, 2025 06:21 AM

புதுச்சேரி: தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு கல்லுாரிகளில் காலத்தோடு சம்பளம் வழங்காமல் ஒவ்வொரு ஆண்டும் அரசு இழுத்தடிப்பது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த காலங்களை போல ஓராண்டு சம்பளம் முன் அனுமதியை மீண்டும் கொண்டு வர வேண்டும் என, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் ஒரு தொழில்நுட்ப பல்கலைக்கழகம் உள்ளது. இது மட்டுமின்றி 11 உயர் கல்வி குழுமங்களின் கீழ் 19 கல்லுாரிகள் உள்ளன. இங்கு மொத்தமாக 5 ஆயிரம் பேராசிரியர்கள், ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதத்தின் கடைசி நாள் தான் ஊதிய தினம். அன்றைய தினம் சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். அப்படியே போனாலும் மாதத்தின் 3ம் தேதிக்குள் சம்பளம் கையில் கிடைத்து விடும். ஆனால் கடந்த சில மாதமாக உயர் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பேராசிரியர்கள், ஊழியர்கள் காலத்தோடு சம்பளம் கிடைக்காமல் நிலை குலைந்துபோய் உள்ளனர். புதுச்சேரி உயர் கல்வி குழுமத்தின் கீழ் உள்ள 5 கல்லுாரிகளுக்கு கடந்த 16ம் தேதி தான், அதுவும் மார்ச், ஏப்ரல் மாதம் சம்பளம் வழங்கப்பட்டது.
பிப்மேட் கீழ் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லுாரி, 4 பாலிடெக்னிக் கல்லுாரிகளுக்கும் அதே தேதியில் மார்ச் மாத, நிலுவை சம்பளம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி இன்ஜினியரிங் கல்லுாரியில் இருந்து தரம் உயர்த்தப்பட்ட புதுச்சேரி தொழில்நுட்ப கல்லுாரியில் படுமோசம். இன்னும் சம்பளம் போடவில்லை. சம்பளத்திற்கு ஏற்ற செலவினம் உண்டு. பலரும் வங்கிகளில் கடனை வாங்கி மாத தவணை கட்டி வருகின்றனர். மாத சம்பளம் காலதாமதமாகி வருவதால் கடும் நெருக்கடியில் உள்ளனர்.
சொசைட்டி கல்லுாரிகளுக்கு இது போன்ற சம்பளம் நெருக்கடி மார்ச், ஏப்ரல், செப்டம்பர் மாதம் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் தலைதுாக்கி வருகிறது. வழக்கம்போல் பிரச்னையும் தீர்க்கப்படாமல் ஆண்டுதோறும் தொடர்கிறது.
என்ன தீர்வு
கடந்த 2016-17ம் ஆண்டு வரை கல்லுாரிகளுக்கு வேறு நடைமுறை இருந்தது. ஓராண்டு வரை பேராசிரியர், ஊழியர்களுக்கு சம்பளம் போட முன் அனுமதி பெற்று வழங்கப்பட்டது. இதில் எந்த பிரச்னையும் எழவில்லை.
அப்போதைய முதல்வர் நாராயணசாமியுடன் ஏற்பட்ட மோதலின்போது கவர்னர் கிரண்பேடி பேராசிரியர் சம்பள அனுமதியை புதிய முறையை புகுத்தினர். 3 மாதத்திற்கு ஒரு முறை சம்பளத்திற்கு அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி முறை கடந்த 2019ம் ஆண்டு முதல் 2022ம் வரை நீடித்தது. இந்த அனுமதி முறையை கண்டித்து ஆசிரியர் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தனர்.
அதன் பிறகு ஆறு மாதத்திற்கு ஒரு சம்பள அனுமதி பெற வேண்டும் என, மாற்றப்பட்டது. இந்த முறை தான் தற்போது அமலில் உள்ளது. இந்த முறையிலும் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது. குறிப்பாக பட்ஜெட்டின்போது சிக்கல் ஏற்படுகிறது.
மார்ச் மாதம் வரை புதுச்சேரி அரசு பட்ஜெட் கூட்டர் தொடர் நடத்துகிறது. அதன் பிறகு ஏப்ரல் 2ம் தேதி பிறகு தான் சம்பள அனுமதி கிடைக்கிறது. அதன் பிறகு தான் சொசைட்டி கல்லுாரிகளுக்கு சம்பள அனுமதிக்கான கோப்பு நகர்கிறது. இதன் காரணமாக மார்ச், ஏப்ரல், செப்டம்பர் மாதங்களில் காலத்தோடு சம்பளம் வழங்குவதில் சிக்கல் ஏற்படுகிறது.
இதற்கு ஒரே தீர்வு. கடந்த காலங்களைபோன்று ஓராண்டு அனுமதி முறையை அரசு கொண்டு வர வேண்டும். இதற்கு கவர்னர், முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.