sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

கடற்கரை மண்டல மேலாண்மை கருத்து கேட்பு கூட்டத்திற்கு தடை

/

கடற்கரை மண்டல மேலாண்மை கருத்து கேட்பு கூட்டத்திற்கு தடை

கடற்கரை மண்டல மேலாண்மை கருத்து கேட்பு கூட்டத்திற்கு தடை

கடற்கரை மண்டல மேலாண்மை கருத்து கேட்பு கூட்டத்திற்கு தடை


ADDED : நவ 06, 2024 08:07 AM

Google News

ADDED : நவ 06, 2024 08:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி : புதுச்சேரியில் இன்றும், காரைக்காலில் நாளை நடைபெற இருந்த கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை திட்ட கருத்து கேட்பு கூட்டத்திற்கு தடை விதித்து தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசின் சுற்றுச்சூழல் வனம், காலநிலை மாற்றம் அமைச்சகம், கடலோர மீனவ மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்து வளப்படுத்தவும், கடற்கரை ஒழுங்குமுறை மண்டல சிறப்பு திட்டத்தை கடந்த, 2019,ல் அறிவித்தது.

இத்திட்டத்தில், கடற்கரை பகுதிகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் ஒழுங்குப்படுத்தப்பட உள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரிக்காக தயாரிக்கப்பட்ட திருத்தப்பட்ட கடற்கரை ஒழுங்குமுறை மண்டல மேலாண்மை திட்டம் குறித்த கருத்துக் கேட்புக் கூட்டம் இன்று, புதுச்சேரி கம்பன் கலையரங்கிலும், காரைக்காலில் நாளை நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த வரைவு திட்டத்தில் மீனவர்கள் வாழ்வாதாரம், உள்கட்டமைப்பு முழுமையாக இடம்பறெவில்லை எனவும், வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி, முழுமையான வரைவு திட்டத்தை தயாரித்து அதன் அடிப்படையில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்த வேண்டும் எனவும், அதுவரை கூட்டத்தை தடை செய்ய வேண்டி , தமிழ் மீனவர் விடுதலை வேங்கைகள் அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மலையாளத்தான், சென்னை தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இவ்வழக்கை விசாரித்த பசுமை தீர்ப்பாயம் இன்று புதுச்சேரியிலும், நாளை காரைக்காலிலும் நடைபெற இருந்த கருத்துக் கேட்புக் கூட்டத்திற்கு தடை விதித்து நேற்று உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us