ADDED : ஜன 31, 2025 07:49 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி; பணி ஓய்வு நாளில் பதவி உயர்வுக்கான பணி ஆணையினை முதல்வர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறையில் 62 தலைமை ஆசிரியர்களுக்கு தலைமையாசிரியர் நிலை 1 பதவி உயர்வு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு முதல்வர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் பதவி உயர்வுக்கான பணி ஆணைகளை வழங்கினர்.
இதில் இன்று 31ம் தேதி பணி ஓய்வு பெறும் பள்ளி துணை ஆய்வாளர் ராபர்ட் கென்னடிக்கு, தலைமையாசிரியர் நிலை 1 பதவிக்கான ஆணை வழங்கப்பட்டது. 37 ஆண்டுகால கல்விப் பணியில் இடைநிலை ஆசிரியர், அறிவொளி ஒருங்கிணைப்பாளர், பள்ளித் துணை ஆய்வாளர் பணி செய்து வந்த ராபர்ட் கென்னடி, இன்று ஓய்வு பெறும் நாளில் தலைமையாசிரியர் நிலை 1 பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

