ராக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
ராக் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் துவக்கம்
UPDATED : ஜூலை 14, 2026 07:37 PM
ADDED : ஜூலை 14, 2026 07:32 PM
புதுச்சேரி: புதுச்சேரி, ராக் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 2026ம் ஆண்டு இளங்கலை மற்றும் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
விழாவிற்கு, ராக் கல்வி நிறுவனங்களின் தலைவர் முகமது பாரூக் தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் அன்வர் பாஷா கல்லுாரியின் சிறப்பம்சங்கள் மற்றும் எதிர்வரும் திட்டங்கள் குறித்து பேசினார். துணை முதல்வர் செந்தில்நாதன் வரவேற்றார்.
சீனியர் எஸ்.பி., நித்யா ராதாகிருஷ்ணன் பங்கேற்று, மாணவர்களிடம் ஒழுக்கம், தன்னம்பிக்கை, சமூகப் பொறுப்பு, பெண்களின் பாதுகாப்பு மற்றும் உயர்ந்த இலக்குகளை அடைவதற்கான முயற்சிகள் குறித்து விளக்கம் அளித்தார்.
கிங்மேக்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அகாடமி நிறுவனர் பூமிநாதன், போட்டித் தேர்வுகளின் அவசியம், தலைமைத்துவப் பண்புகள், இலக்கை நோக்கிய திட்டமிடல் மற்றும் தொடர்ந்து கற்றலின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.
விழாவில், ராக் கல்வி நிறுவனங்களின் துணைத் தலைவர் முகமது சயீத், அறக்கட்டளை நிர்வாகிகள் முகமது யூனுஸ், முகமது இஸ்மாயில், கல்லுாரி நிர்வாக செயலாளர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலர்கள், முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
