ADDED : ஏப் 24, 2026 08:03 PM
புதுச்சேரி: ஈஷா அறக்கட்டளை சார்பில் கிருஷ்ண லீலா எனும் புதிய நுால் அறிமுக விழா, இன்று (25ம் தேதி) புதுச்சேரியில் நடக்கிறது.
ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு எழுதிய, கிருஷ்ணரின் பல்வேறு பரிணாமங்கள் குறித்து ஆற்றிய உரைகளின் தொகுப்பான கிருஷ்ண லீலா எனும் புதிய நுாலின் அறிமுக விழா, இன்று (25ம் தேதி) புதுச்சேரி எஸ்.வி., படேல் சாலையில் உள்ள ஓட்டல் சற்குரு, லோட்டஸ் ஹால், 5வது தளத்தில் மாலை 6:00 மணிக்கு நடக்கிறது.
விழாவில், புதுச்சேரி, இந்திய தொழில் கூட்டமைப்பின் தலைவர் நடராஜன், சற்குரு ஹோட்டல் நிர்வாக இயக்குனர் அமர்நாத், கவிஞர் ரமணன் மற்றும் இசைக்கலைஞர் இந்திரா விஜயலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, புதிய நுாலை அறிமுகம் செய்து வைத்து, சிறப்புரை ஆற்றுகின்றனர்.
நிகழ்ச்சியில், ஈஷா அறக்கட்டளை நிர்வாகிகள், ஊழியர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
