/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் அரசாணை வெளியீடு
/
பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் அரசாணை வெளியீடு
பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் அரசாணை வெளியீடு
பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் அரசாணை வெளியீடு
ADDED : நவ 06, 2024 11:30 PM
புதுச்சேரி; பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பள அரசாணை வெளியிடப்பட்டது.
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் காங்., ஆட்சியில் கடந்த 2010ம் ஆண்டு பணி அமர்த்தப்பட்ட 1,202 பேருக்கும், மாதம் 16 நாள் பணி வீதம் ரூ. 3,200 சம்பளம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2022ம் ஆண்டு இந்த சம்பளம் ரூ. 10 ஆயிரமாக உயர்த்தப்பட்டது.
இந்நிலையில், பொதுப்பணித்துறை வவுச்சர் ஊழியர்களுக்கு மாத சம்பளம் ரூ. 10 ஆயிரத்தில் இருந்து ரூ. 18 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என, முதல்வர் ரங்கசாமி அறிவித்தார். அதன்படி தற்போது பணியாற்றி வரும் 1,202 வவுச்சர் ஊழியர்களுக்கும், 176 வாரிசுதாரர்கள் சேர்த்து மொத்தம் 1,378 பேருக்கு சம்பள உயர்வுக்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
சட்டசபையில் முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமிநாராயணன், உயர்த்தப்பட்ட சம்பள ஆணையை வவுச்சர் ஊழியர்களுக்கு வழங்கினர். வவுச்சர் ஊழியர்கள் சங்க பொறுப்பாளர் சரவணன் உள்ளிட்டோர் முதல்வர் ரங்கசாமிக்கு நன்றி தெரிவித்தனர்.
வவுச்சர் ஊழியர் சங்க சரவணன் கூறுகையில், 'வவுச்சர் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததால் 50க்கும் மேற்பட்டோர் பணியை புறக்கணித்து வெளிநாடு வேலைக்கு சென்றனர். 10 ஆண்டு தொடர் போராட்டத்தால் தற்போது சம்பளம் உயர்த்தப்பட்டது. இதனை அறிந்து பணி வேண்டாம் என சென்ற 50 பேர், முறைகேடாக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களை நீக்க முதல்வரிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களை நீக்கும் வரை தொடர் போராட்டம் நடக்கும்' என்றார்.