/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு: மகிளா காங்., தலைவி கைது
/
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு: மகிளா காங்., தலைவி கைது
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு: மகிளா காங்., தலைவி கைது
பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு: மகிளா காங்., தலைவி கைது
ADDED : மார் 02, 2026 03:48 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து, கருப்பு கொடி காட்ட முயன்ற மகிளா காங்., தலைவியை போலீசார் கைது செய்தனர்.
பிரதமர் மோடி பல்வேறு நலத்திட்டங்களை துவக்கி வைப்பதற்காக நேற்று புதுச்சேரிக்கு வருகை தந்தார். இதற்கிடையே, நேற்று முன்தினம் புதுச்சேரி மாநில மகிளா காங்., தலைவி நிஷா பேசிய வீடியோ, சமூக வலைதளத்தில் வெளியானது. அதில், 'கோ பேக் மோடி' என அச்சிடப்பட்ட டி-சர்ட் அணிந்து, பிரதமர் வருகையின் போது கருப்பு கொடி காட்டியும், கருப்பு பலுான்களை பறக்கவிட்டும் எதிர்ப்பு தெரிவிப்போம் என, பேசியிருந்தார். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதலியார்பேட்டை போலீசார் நேற்று காலை 7:00 மணிக்கு அதிரடியாக நிஷாவின் வீட்டிற்கு சென்று அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதேபோல், வில்லியனுார் உத்திரவாகினிபேட் பகுதியை சேர்ந்த தேசிய மக்கள் முன்னனி துணைத் தலைவர் ஜெபின் லாசரஸ், 40; மோடி வருகைக்கு கருப்பு கொடி காட்டவுள்ளதாக வாட்ஸ் ஆப்பில் செய்தி வெளியிட்டிருந்தார். முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக வில்லியனுார் போலீசார் அவரை கைது செய்தனர். லாஸ்பேட்டையில் நிகழ்ச்சி முடிந்து பிரதமர் மோடி சென்ற பிறகு, போலீசார் கைது செய்தவர்களை விடுவித்தனர்.

