/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மொழியியல் பண்பாட்டு நிறுவனத்தை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

ADDED : ஏப் 09, 2025 04:32 AM

புதுச்சேரி : புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் பாதுகாப்பு கூட்டு குழு மற்றும் அனைத்து தமிழ் அமைப்புகள் மற்றும் சமூக அமைப்புகள், மாணவர்கள் இயக்கங்கள் இணைந்து, மிஷன் வீதி, மாதா கோவில் அருகே நேற்று காலை 10:00 மணியவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
எதிர் கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ., தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் அனிபால்கென்னடி, செந்தில்குமார், மற்றும் புதுச்சேரி தமிழ்ச்சங்க செயலாளர் சீனுமோகன்தாஸ், வேல்முருகன், சுந்தர முருகன் முன்னிலை வகித்தனர்.
பொருளாதரத்தில் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ள மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்வதற்கு, புதுச்சேரியில், மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் துவங்கப்பட்டது. இந்த நிறுவனத்தின் கட்டடத்தை வேறு ஒரு துறையிடம் ஒப்படைக்க கூடாது, மொழியியல் பண்பாட்டு துறைக்கு முழு நேர இயக்குநர் மற்றும் பேராசிரியர்கள் நியமிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டது.இதில், பல்வேறு அமைப்புகள், தமிழ் ஆர்வலர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின் துறை அமைச்சர் திருமுருகனை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.