/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாணவி பலாத்காரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மாணவி பலாத்காரத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 27, 2024 06:21 AM

புதுச்சேரி,: அண்ணா பல்கலைக்கழக மாணவி பலாத்காரம் செய்யப்பட்டதை கண்டித்து, அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்ஜினியரிங் கல்லுாரி மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை கண்டித்து புதுச்சேரி அண்ணா சிலை அருகே அகில பாரத வித்யார்த்தி பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்றுநடந்தது.
மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். புதுச்சேரி பல்கலைக்கழக மாணவிகள் ஆர்த்தி, கோகிலா, கீர்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், பல்வேறு கல்லுாரி மாணவ, மாணவிகள் கண்களில் கருப்பு துணியை கட்டிக்கொண்டு குற்றவாளிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், தமிழக அரசை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். புதுச்சேரி கோட்ட ஒருங்கிணைப்பாளர் தீபன் நன்றி கூறினார்.