/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
/
மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 08, 2025 05:09 AM

புதுச்சேரி:   புதுச்சேரி மாநில இந்திய கம்யூ., மா.கம்யூ., கம்யூ., (எம்.எல்) சார்பில், அம்பேத்கரை இழிவுபடுத்திய மத்திய அமைச்சர் அமித்ஷா கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது.
சுதேசி மில் அருகே நடந்த ஆர்பாட்டத்திற்கு, இந்திய கம்யூ., மாநில செயலாளர் சலீம், மா. கம்யூ., மாநில செயலாளர் ராமச்சந்திரன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி மாநில செயலாளர் புருஷோத்தமன் தலைமை தாங்கினர்.
முன்னாள் அமைச்சர்விசுவநாதன், இந்திய கம்யூ., மாநில துணை செயலாளர் சேதுசெல்வம், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா, முன்னாள் எம்.எல்.ஏ., நாரா கலைநாதன், மா.கம்யூ., மாநில செயற்குழு உறுப்பினர்கள் பெருமாள், ராஜாங்கம், சீனுவாசன், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கட்சி பாலசுப்ரமணியன், அருள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷா பொறுப்பில் நீடிக்கக்கூடாது. அவரை அமைச்சரவையிலிருந்து வெளியேற்ற வேண்டும் என, வலியுறுத்தி  கோஷம் எழுப்பினர்.

