/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மகளிர் ஆணையத்தை கண்டித்து போராட்டம்: பெண்கள் கைது
/
மகளிர் ஆணையத்தை கண்டித்து போராட்டம்: பெண்கள் கைது
மகளிர் ஆணையத்தை கண்டித்து போராட்டம்: பெண்கள் கைது
மகளிர் ஆணையத்தை கண்டித்து போராட்டம்: பெண்கள் கைது
ADDED : நவ 26, 2025 07:53 AM

புதுச்சேரி: மகளிர் ஆணையத்தை கண்டித்து, புதுச்சேரி மகளிர் கூட்டமைப்பினர்,போராட்டம் நடத்த சென்ற போது போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சர்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மகளிர் கூட்டமைப்பினர், வன்கொடுமை பிரச்னையில் தலையிடாத மகளிர் ஆணையத்தை கண்டித்து, போராட்டம் நடத்த சென்றனர்.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் அன்பரசி, சமூகப் பெண்கள் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் குணபூஷணம், அகில இந்திய பெண்கள் முற்போக்கு கழகம் பொதுச் செயலாளர் விஜயா, மகளிர் விடுதலை இயக்கம் தலைவர் லட்சுமி, மாநில துணைத்தலைவர் சத்தியா, மாநில துணை செயலாளர் உமா உட்பட நிர்வாகிகள், மலர் வளையத்துடன், மகளிர் ஆணையத்திற்கு, இந்திரா சதுக்கம் வழியாக காலை 10:00 மணியளவில் சென்றனர். அப்போது, ரெட்டியார்பாளையம் போலீசார், அவர்களை தடுத்தி நிறுத்தினர். அதை மீறி சென்ற, அவர்களை போலீசார் கைது செய்தனர்.

