/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தாய் வழி சான்றிதழ் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
/
தாய் வழி சான்றிதழ் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
தாய் வழி சான்றிதழ் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
தாய் வழி சான்றிதழ் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா
ADDED : நவ 16, 2024 02:29 AM

புதுச்சேரி: தாய் வழியில் சாதி சான்றிதழ் வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி கலெக்டர் அலுவலகத்தில் மாதந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. நுாற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள், பொதுநல அமைப்புகள் கலெக்டர் குலோத்துங்கனை சந்தித்து மனு அளித்தனர்.
பெற்றோர் மாணவர் சங்க தலைவர் பாலா, உயர்கல்வி வேலை வாய்ப்பிற்கு, வருவாய்த்துறை போலி ஆவணங்களுக்கு தகுதியில்லாதவர்களுக்கு சாதி, குடியிருப்பு சான்றிதழ் வழங்குவதால் மண்ணின் மைந்தர்கள் உரிமை பறிக்கப்படுவகிறது. இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தார்.
சென்டாக் மாணவர் மற்றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் நாராயணசாமி அளித்த மனுவில்; சென்டாக் மருத்துவ படிப்பில் என்.ஆர்.ஐ., ஒதுக்கீட்டு 2ம் கட்ட கலந்தாய்வில் சேர்ந்துள்ள 37 மாணவர்களில், பலர் போலி சான்றிதழ் சமர்பித்துள்ளனர்.
தாசில்தார் தலைமையில் சான்றிதழ்களை ஆய்வு செய்து முறைகேடு செய்த மாணவர்கள் மீது நடவிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது.
இடஒதுக்கீடு மறுக்கப்பட்ட பட்டியல் இன இயக்க தலைவர் வீரமணி தலைமையில் பலர் மனு அளிக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி தாய் வழியில் எஸ்.சி., - எஸ்.டி., மக்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
தற்போது ஏன் நிறுத்தப்பட்டது, மக்களிடம் கருத்தரங்கு கூடத்தில் மனுக்கள் வாங்க வேண்டும் என கோரி, தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
அவர்களை கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து அனுப்பினர்.
முகாமில் 171 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.