ADDED : மார் 08, 2024 06:46 AM

அ நிறம் | அளவு
புதுச்சேரி : பாலியல் பலாத்காரம் கொலை செய்யப்பட்ட சிறுமி மரணத்திற்கு நீதி கேட்டு ஆர்ப்பாட்டம், பேரணி நடந்தது.
புதுச்சேரி சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் நீதி கேட்டு, நேற்று காலை அஜந்தா சிக்னல் அருகே மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒதியஞ்சாலை ஆரம்ப சுகாதார நிலையம் எதிரிலும் கல்லுாரி மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சில மீனவர்கள் படகுகளில் கடலுக்குள் சென்று சிறுமியின் இறப்பிற்கு நீதி வேண்டும் என்ற பேனருடன், கோஷமிட்டபடி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
புதுச்சேரி ரயில் நிலைய ஆட்டோ ஸ்டாண்டில், ஆட்டோ டிரைவர்கள் ஒன்று கூடி சிறுமியின் படத்திற்கு மெழுகு வர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
