/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுத்தமான குடிநீர் வழங்காவிட்டால் போராட்டம்: ஓம்சக்தி சேகர் எச்சரிக்கை
/
சுத்தமான குடிநீர் வழங்காவிட்டால் போராட்டம்: ஓம்சக்தி சேகர் எச்சரிக்கை
சுத்தமான குடிநீர் வழங்காவிட்டால் போராட்டம்: ஓம்சக்தி சேகர் எச்சரிக்கை
சுத்தமான குடிநீர் வழங்காவிட்டால் போராட்டம்: ஓம்சக்தி சேகர் எச்சரிக்கை
ADDED : ஆக 14, 2025 01:20 AM
பாகூர் : நகரப் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்காவிட்டால், பொதுப்பணித்துறை அலுவலகம் முன், போராட்டம் நடத்தப்படும் என, அ.தி.மு.க., உரிமை மீட்பு குழு மாநில செயலாளர் ஓம்சக்திசேகர் எச்சரித்துள்ளார்.
அவரது அறிக்கை;
மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருவதாகவும், கிராமங்களில் 3.23 கோடியாக இருந்த குடிநீர் இணைப்புகள் தற்போது, 15.50 கோடி இணைப்புகளாக உயர்ந்துள்ளதாக, மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.புதுச்சேரி, உள்ளிட்ட சிறிய மாநிலங்களில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் 100 சதவீதம் வீட்டு குடிநீர் இணைப்புகள் வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் குடிநீரின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
தற்போது குடிநீர் தரம் மோசமாகி எந்த பயன்பாட்டிற்கும் உபயோகப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
நெல்லித்தோப்பு தொகுதி, குயவர்பாளையம் சக்தி நகர், டி.ஆர். நகர் அண்ணா நகர், பெரியார் நகர் நெல்லிமா நகரில்குடிநீரில் டி.டி.எஸ். அளவு 2,000 ஆகவும், நவீனா கார்டன், பகத் சிங் தெரு, நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் வீதி உள்ளிட்ட பகுதிகளில் டி.டி.எஸ். 4000 என, புதுச்சேரியிலேயே அதிகபட்சமாக உள்ளது. இது மிகவும் அபாயகரமானது.
எனவே, அரசு உடனடியாக நகரப் பகுதியில் குடிநீரின் தரத்தை ஆய்வு செய்து, சுத்தமான குடிநீர் வழங்கிட வேண்டும். நடவடிக்கை எடுக்காவிட்டால் பொதுப்பணித்துறை அலுவலகம் முன், மக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

