/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம், ரயில் மறியல்
/
மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம், ரயில் மறியல்
மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம், ரயில் மறியல்
மத்திய அமைச்சரை கண்டித்து ஆர்ப்பாட்டம், ரயில் மறியல்
ADDED : டிச 21, 2024 06:32 AM

புதுச்சேரி : அம்பேத்கரை அவமதித்து பேசியதாக மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து காங்., இந்திய கம்யூ., வி.சி., கட்சியினர் ஆர்ப்பாட்டம் மற்றும் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி மாநில காங்., எஸ்.சி., - எஸ்.டி., அணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநிலத் தலைவர் வைத்திலிங்கம் எம்.பி., தலைமை தாங்கினார். எஸ்.சி., எஸ்.டி., பிரிவு தலைவர் ஜெயபால், முன்னாள் முதல்வர் நாராயணசாமி முன்னிலை வகித்தனர். வைத்தியநாதன் எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர்கள் ஷாஜகான், கந்தசாமி, சீனியர் துணைத் தலைவர் தேவதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் அனந்தராமன், கார்த்திகேயன், இளைஞர் காங்., தலைவர் ஆனந்தபாபு, வழக்கறிஞர் பிரிவு மருது பாண்டியன், சிறப்பு அழைப்பாளர் வினோத், மோகன்தாஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்திய கம்யூ., ஆர்ப்பாட்டம்
இந்திய கம்யூ., சார்பில், காமராஜர் சிலை எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைச் செயலாளர் சேதுசெல்வம் தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், தேசிய குழு உறுப்பினர் தினேஷ் பொன்னையா உட்பட பலர் பங்கேற்றனர்.
வி.சி., ரயில் மறியல்
வி.சி., கட்சியினர் மாநில துணை பொதுச் செயலாளர் பாவாணன் தலைமையில் சுதேசி மில் அருகில் இருந்து, ஊர்வலமாக சென்று, ஏ.எப்.டி., மில் அருகே ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் - வி.சி., கட்சியினர் இடையே வாக்குவாதம், தள்ளு - முள்ளு ஏற்பட்டது. மத்திய அமைச்சர் அமித்ஷா உருவப்படத்தை தீ வைத்து எரித்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

