ADDED : அக் 19, 2024 11:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : இந்திரா நகர் தொகுதியில் இலவச போர்வை மற்றும் காலணிகளை அரசு கொறடா ஆறுமுகம் முதியோர்களுக்கு வழங்கினார்.
சமூக நலத்துறை மூலம் முதியோர்களுக்கு இலவச போர்வை மற்றும் காலணிகள் வழங்கி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, இந்திரா நகர் தொகுதிக்குட்பட்ட, காமராஜர் நகர், காந்தி நகர், திலாசுபேட்டை, வீமகவுண்டம்பாளையம் பகுதியில் வசிக்கும் முதியோர்களுக்கு இலவச போர்வை, காலணி ஆகியவற்றை அரசு கொறடா ஆறுமுகம் வழங்கினார்.
நிகழ்ச்சியில், சமூக நலத்துறை அதிகாரிகள், என்.ஆர்., காங்., நிர்வாகிகள் பங்கேற்றனர்.