/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கல்
/
கல்வி உபகரணங்கள் மாணவர்களுக்கு வழங்கல்
ADDED : பிப் 14, 2025 04:38 AM

புதுச்சேரி: சாரம், எஸ்.ஆர்.எஸ்., அரசு உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சார்பில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கான தேர்வு கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு, தலைமை ஆசிரியர் ஜோதி தலைமை தாங்கினார். முன்னாள் ஆசிரியர்கள் அண்ணாமலை, அமுதா ஆகியோர் பொதுத் தேர்வு எழுதயுள்ள மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கினர்.
கடந்த பொது தேர்வில் தமிழ் பாடத்தில் 80 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்த மாணவ, மாணவிகள் 5 பேருக்கு முன்னாள் தமிழ் ஆசிரியை அமுதா, தனது சொந்த செலவில் தலா ரூ.1,000 வழங்கினார். பள்ளி ஆசிரியர் காண்டிபன், முன்னாள் மாணவர்கள் முரளி, மகாலிங்கம், கவுஸ், ஜெயலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.