ADDED : அக் 05, 2025 03:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியில் 20 கோவில்களுக்கு, ஒரு கால பூஜைக்கான நிதியை, சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
இந்து சமய அறநிலைத்துறை மூலம், மணவெளி தொகுதியில் உள்ள கோவில்களுக்கு ஒரு கால பூஜைக்கு தலா 30 ஆயிரம் வீதம், 20 கோவில்களுக்கு, மொத்தம் 6 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது. தவளக்குப்பம் எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், சபாநாயகர் செல்வம் கோவில் நிர்வாகிகளிடம் நிதியை வழங்கினார்.
நிகழ்ச்சியில், கோவில் நிர்வாகிகள், பா.ஜ., முக்கிய பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.