/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
திருநங்கைகளுக்கு மளிகை பொருள் வழங்கல்
/
திருநங்கைகளுக்கு மளிகை பொருள் வழங்கல்
ADDED : ஜன 02, 2025 06:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: புதுச்சேரி அபயம் தொண்டு நிறுவனம் சார்பில் திருநங்கைகளுக்கு மளிகை பொருள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டது.
புதுச்சேரியை சேர்ந்த அன்னலட்சுமி திருநங்கைகள் மேம்பாட்டு அமைப்பினர் சமீபத்திய புயல் மழையால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு நிவாரணம் வழங்ககோரி அபயம் தொண்டு நிறுவனத்திடம் உதவி கோரினார்.
இதையடுத்து, அபயம் தொண்டு நிறுவனம் சார்பில் நிறுவனர் சுந்தர முருகன், 14 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பினை மழையால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு வழங்கினார்.
இதில், அன்னலட்சுமி திருநங்கைகள் மேம்பாட்டு அமைப்பின் தலைவி கிரிஜா நாயக் மற்றும் பலர் உடனிருந்தனர்.