/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மீனவ குடும்பங்களுக்கு மதிய உணவு வழங்கல்
/
மீனவ குடும்பங்களுக்கு மதிய உணவு வழங்கல்
ADDED : நவ 19, 2025 07:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: ராஜ்பவன் தொகுதியில் கனமழையால் பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு காங்., மாநில செயலாளர் குமரன் மதிய உணவு வழங்கினார்.
புதுச்சேரியில் பெய்து வரும் தொடர்கன மழையால், ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாமல் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, வீட்டில் இருந்து வருகின்றனர். அதனை அறிந்து கடலோரம் உள்ள வைத்திகுப்பம், குருசுகுப்பம் மற்றும் கணேஷ் நகர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு காங்., மாநில செயலாளர், வழக்கறிஞர்குமரன் வீடு வீடாக சென்று மதிய உணவு வழங்கினார். அப்போது ராஜ்பவன் தொகுதி காங்.,பொறுப்பாளர்கள், நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.

