தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாலுாட்டும் தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கல்

பாலுாட்டும் தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கல்

பாலுாட்டும் தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கல்


ADDED : ஜூலை 31, 2025 03:04 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2025 03:04 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில், 237 கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மேம்பாட்டிற்காக ஆதிதிராவிடர் நலத்துறை, பல்வேறு திட்டங்களின் கீழ் இந்தாண்டு ரூ.3.16 கோடிக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கர்ப்பிணி மற்றும் பாலுாட்டும் தாய்மார்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்கீழ், ரூ.13 ஆயிரம் (முதல் குழந்தை) மற்றும் ரூ.18 ஆயிரம் (இரண்டாம் குழந்தை) வீதம் மொத்தம் 237 நபர்களுக்கு ரூ.36.61 லட்சம் நிதியுதவியை முதல்வர் ரங்கசாமி நேற்று சட்டசபையில் வழங்கினார்.

அப்போது சபாநாயகர் செல்வம், சிவா எம்.எல்.ஏ., ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் இளங்கோவன், கண்காணிப்பாளர் வேல்முருகன் லெபாஸ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us