/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
/
மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
ADDED : மார் 20, 2025 04:55 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: சமூக நலத்துறை சார்பில் மாற்று திறனாளிகளுக்கான விலையில்லா இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர் வழங்கப்பட்டது.
சட்டசபை வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்கி, தட்டாஞ்சாவடி, ராஜ்பவன் தொகுதிகளைச் சேர்ந்த 149 பயனாளிகளுக்கு ரூ.1.33 கோடி மதிப்பிலான இணைப்பு சக்கரம் பொருத்திய ஸ்கூட்டர்களை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் தேனீ ஜெயக்குமார், லட்சுமிநாராயணன், திருமுருகன், நலத்துறைச் செயலர் சுந்தரேசன், இயக்குநர் ராகினி உடனிருந்தனர்.