/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கல்
ADDED : ஏப் 09, 2025 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருபுவனை, : சமூக நலத்துறை சார்பில், திருபுவனை தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ஸ்கூட்டர் மற்றும் மாதாந்திர நிதி உதவி வழங்கப்பட்டது.
திருபுவனை எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு அங்காளன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, மாற்றுத்திறனாளிகள் 3 பேருக்கு சமூக நலத்துறையின் மூலம் ஸ்கூட்டர் மற்றும் 10 பேருக்கு மாதாந்திர நிதி உதவியை வழங்கினார்.
சமூக நலத்துறை இணை இயக்குநர் ஆறுமுகம், கண்காணிப்பாளர் திருமுருகன், அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

