ADDED : ஜூலை 19, 2025 02:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: திருபுவனை தொகுதி சிலுக்காரிபாளையம், அரசு தொடக்கப் பள்ளிக்கு காங்., கமிட்டி சார்பில் எல்.இ.டி., டி.வி., கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா நடந்தது.
விழாவிற்கு, வட்டார காங்., பொதுச் செயலாளர் வேலு தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
காங்., மாநில தலைவர் வைத்திலிங்கம், மாநில பொதுச் செயலாளர் தனுசு ஆகியோர் கலந்து கொண்டு, பள்ளிக்கு எல்.இ.டி., டி.வி., மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் மற்றும் காலனிகள் வழங்கினர்.
இதில், வட்டார தலைவர்கள் ஜெயக்குமார், துளசிங்கபெருமாள், நிர்வாகிகள் நடராஜன், ஜெயபால், சுந்தரமூர்த்தி, கார்த்திகேயன், அமிர்தராஜ், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.