sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 விவசாய தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

/

 விவசாய தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 விவசாய தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

 விவசாய தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்


ADDED : பிப் 27, 2026 05:04 AM

Google News

ADDED : பிப் 27, 2026 05:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வில்லியனுார்: புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை சார்பில் 'வளர்ந்த வேளாண்மை- வளர்ந்த புதுச்சேரி' என்ற தலைப்பில் விவசாய கூலித் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா அரியூரில் நடந்தது.

கவர்னர் கைலாஷ்நாதன் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். விழாவில் சபாநாயகர் செல்வம், வேளாண் அமைச்சர் தேனீ ஜெயக்குமார் மற்றும் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

விழாவில் விவசாய கூலித் தொழிலாளர்கள் 6,779 பேருக்கு மழைக்கால உதவித்தொகை ரூ. 2 ஆயிரம் வழங்குவதற்கான அடையாள அட்டை, 75 அட்டவணை இனத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு பேட்டரி ஸ்பிரேயர் மற்றும் தார்ப்பாய்கள், 10 விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் டிராக்டர், பவர் டில்லர்கள் வழங்கப்பட்டன.

கரும்பு விவசாயிகளுக்கு ரூ.84:27 லட்சம் மானிய தொகை, ஆழ்குழாய் கிணறுகள் அமைத்தவர்களுக்கு ரூ. 4:25 லட்சம் மானியம் வழங்கப்பட்டது. இயற்கை வேளாண்மை திட்டத்தின் கீழ் 577 விவசாயிகளுக்கு மானிய உதவிகளும், மொபைல் போன்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us