பாலுாட்டும் தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
பாலுாட்டும் தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : செப் 04, 2026 05:14 PM
அ நிறம் | அளவு
நெட்டப்பாக்கம்: நெட்டப்பாக்கம் தொகுதியை சேர்ந்த பாலுாட்டும் தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜவேலு வழங்கினார்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், நெட்டப்பாக்கம் தொகுதியைச் சேர்ந்த பாலுாட்டும் தாய்மார்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி கரியமாணிக்கம் அமைச்சர் அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜவேலு கலந்து கொண்டு பாலுாட்டும் தாய்மார்கள் 46 பயனாளிகளுக்கு ரூ. 18 ஆயிரம் வீதம் ரூ. 8 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் நிதியுதவி மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் துறை நல ஆய்வாளர் செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
