தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்

 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கல்


ADDED : பிப் 24, 2026 04:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 24, 2026 04:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: லுார்து சமூக நல அறக்கட்டளை சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

கல்வி சேவையை சிறப்பாக ஆற்றிவரும் அமலோற்பவம் கல்விக் குழுமத்தின், லுார்து சமூக நல அறக்கட்டளை சார்பில், அரசுப் பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி வருகிறது.

அதன்படி, புதுச்சேரி காரமணிக்குப்பம் ஜீவானந்தம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, தரமான கல்வி பெறவேண்டும் நோக்கில் நீட், ஜே.இ.இ. மற்றும் கிளாட் தேர்வுக்கான முன் தயாரிப்பு புத்தகங்கள், கையேடுகள், முந்தைய தேர்வு வினாத்தாள் தொகுப்புகள், ஆழமான ஆங்கில இலக்கண அறிவூட்டும் மார்ட்டின் புத்தகங்கள், அட்லஸ், அகராதி, கலைக் களஞ்சிய நூல்கள், கதைப் புத்தகங்கள், சிந்தனையைத் தூண்டும் இலக்கியங்கள் மற்றும் பிற அத்தியாவசிய குறிப்புகள் அடங்கிய ரூ.10 ஆயிரம் மதிப்பிலான 75 புத்தகங்கள் இலவசமாக மாணவர்களுக்கு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us