/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பார்வையற்றவர்களுக்கு கண்ணாடி வழங்கல்
/
பார்வையற்றவர்களுக்கு கண்ணாடி வழங்கல்
ADDED : ஜன 22, 2025 08:51 AM

புதுச்சேரி : பாண்டிச்சேரி ரோட்டரி பிரைடு சங்கம் மற்றும் நெய்வேலி ரோட்டரி லிக்னைட் சிட்டி சங்கம் இணைந்து பார்வையற்றவர்களுக்கு ஸ்மார்ட் கண்ணாடிகள் வழங்கின.
புதுச்சேரி தனியார் ேஹாட்டலில் நடந்த நிகழ்ச்சியில், ரோட்டரி மாவட்ட ஆளுநர்கள் பாஸ்கரன், வைத்தியநாதன், முன்னாள் மாவட்ட ஆளுநர் மணி, மாவட்ட சமூக சேவை தலைவர் ஆனந்தன், மருத்துவர் ரமேஷ், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பாலாஜி, ஜோதி கண் பராமரிப்பு மையத்தின் நிறுவனர் வனஜா உட்பட உதவி ஆளுநர்கள், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், குளேக்கோமா, விழித்திரை உள்ளிட்டவை கண் நோய்களை பரிசோதனை செய்யப்பட்டு, பார்வையற்ற 25 பயனாளிகளுக்கு ஸ்மார்ட் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.