/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து போலீசாருக்கு ஹெல்மெட் வழங்கல்
/
போக்குவரத்து போலீசாருக்கு ஹெல்மெட் வழங்கல்
ADDED : நவ 20, 2024 04:57 AM

அரியாங்குப்பம்: சாலை விபத்தை தடுப்பது பற்றி ஆலோசனை வழங்கிய, டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் போலீசாருக்கு ஹெல்மெட் வழங்கினார்.
சாலை விபத்தை தடுப்பது பற்றி, மேற்கு மற்றும் தெற்கு பகுதி போக்குவரத்து சார்பில், அரியாங்குப்பம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. டி.ஐ.ஜி., சத்திய சுந்தரம் தலைமை தாங்கி, பேசிதாவது: சாலை விபத்து தினத்தோறும் நடந்து வருகிறது. அதனை தடுக்க, ஹெல்மெட், காரில் சீட் பெட் அணிவது, வாகனத்தை குறைந்த வேகத்தில் ஓட்டுவது, சாலை விதிமுறைகளை கடைப்பிடிப்பது, குறித்து பொதுமக்களுக்கு, போக்குவரத்து போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும், மது குடித்தும், சீட் பெட் அணியாமல், வாகனத்தை ஓட்டுபவர்கள் மீதும், விதிமுறைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். என அவர் பேசினார். அதனை தொடர்ந்து, பணி செய்யும் போது, போக்குவரத்து போலீசாருக்கு டி.ஐ.ஜி., வெள்ளை கலரில் ெஹல்மெட் அணிவித்தார்.
நிகழ்ச்சியில், சீனியர் எஸ்.பி., பிரதீப்குமார் திரிபாதி, எஸ்.பி., மோகன்குமார், இன்ஸ்பெக்டர் கணேசன் உட்பட போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.