/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பள்ளி மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கல்
/
பள்ளி மாணவர்களுக்கு 'லேப்டாப்' வழங்கல்
ADDED : பிப் 06, 2024 11:10 PM

அரியாங்குப்பம் : மணவெளி தொகுதியில் உள்ள மூன்று அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப்பை சபாநாயகர் செல்வம் வழங்கினார்.
புதுச்சேரி அரசு கல்வித்துறை சார்பில், நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளியில் இலவச லேப்டாப் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதில், அரியாங்குப்பம் பெரியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி, நோணாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளில் பயிலும், பிளஸ் 1, மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் மொத்தம் 307 பேருக்கு லேப்டாப் வழங்கப்பட்டன.
சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம், மாணவர்களுக்கு லேப்டாப்பை வழங்கி, பேசினார்.
நிகழ்ச்சியில், பள்ளிக் கல்வித்துறை முதன்மை இயக்குனர் தனசெல்வம் நேரு, துணை இயக்குனர் (ஆரம்பக் கல்வி) முனுசாமி, நோனாங்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் கல்யாணி, தலைமை ஆசிரியை ராதிகா, பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் விஜயா, தவளக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி துணை முதல்வர் பிரேமா உட்பட பலர் பங்கேற்றனர்.

