/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டர் சைக்கிள் வழங்கல்
/
மாற்றுத்திறனாளிகளுக்கு மோட்டர் சைக்கிள் வழங்கல்
ADDED : மார் 30, 2025 03:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : உப்பளம் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கு அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., மோட்டர் சைக்கிள் வழங்கினார்.
புதுச்சேரி சமூகநலத்துறை சார்பில், உப்பளம் தொகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறாளிகளுக்கு மோட்டர் சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி எம்.எல்.ஏ., அலுவலகத்தில் நடந்தது.
அனிபால் கென்னடி எம்.எல்.ஏ., 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 5.50 லட்சம் மதிப்பில் மோட்டர் சைக்கிளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் சமூக நல துறை ஊழியர்கள் ஞானவேல், அன்பரசன், தொகுதி செயலாளர் சக்திவேல், அவை தலைவர் அரிகிருஷ்ணன், துணை தொகுதி செயலாளர் ராஜி, கிளை செயலாளர்கள் இருதயராஜ், ராகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.