அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்
அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கல்
ADDED : பிப் 19, 2026 05:16 AM

அ நிறம் | அளவு
பாகூர்: பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, காங்., மாநில செயலாளர் மோகன்தாஸ் எழுது பொருட்கள் வழங்கினார்.
ஏம்பலம் தொகுதி, கிருமாம்பாக்கம் அடுத்த பனித்திட்டு அரசு உயர்நிலைப் பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அவர்களுக்கு எழுது பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியை கிராம மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.
நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக காங்., மாநில செயலாளர் மோகன்தாஸ் கலந்து கொண்டு, மாணவ, மாணவிகளுக்கு எழுது பொருட்களை வழங்கினார்.
