ADDED : ஆக 31, 2025 05:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாகூர் : குருவிநத்தம் பாரதிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளி, மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமையாசிரியர் குமாரராசு தலைமை தாங்கினார். ஆசிரியை சாமுண்டீஸ்வரி வரவேற்றார். நல்லாசிரியர் வெற்றிவேல் முன்னிலை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக, செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு, மாணவர்களுக்கு சீருடை மற்றும் தையல் கூலி தொகையினை வழங்கினார்.
பட்டதாரி ஆசிரியர்கள் இரிசப்பன், சங்கரதேவி, தேவி, வனிதா, திவ்யா, செந்தில், தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ரேவதி, வருண், குபேரன், சுகந்தி, அமலா, சிறப்பு ஆசிரியர் அகிலாண்டேஸ்வரி, கணிப்பொறி பயிற்றுநர் பாலமுரளி ஆகியோர் வாழ்த்தி பேசினர்.
உடற்கல்வி ஆசிரியர் கமலக்கண்ணன் நன்றி கூறினார்.