ADDED : செப் 29, 2025 03:04 AM

புதுச்சேரி: ஆயுத பூஜையை முன்னிட்டு அரியாங்குப்பம் தொகுதியைச் சேர்ந்த 100 நாள் வேலை செய்யும் பெண்களுக்கு ரூ. 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தனது சொந்த செலவில் வழங்கினார்.
அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட வீராம்பட்டினம் கிராம பஞ்சாயத்தில் உள்ள 120 பேருக்கு சில்வர் குடம், மண் அள்ளுவதற்கு உதவிடும் மண்வெட்டி, அலுமினிய பாத்திரம் மற்றும் கத்தி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள், அதேபோல், காக்காயந்தோப்பு, ராதாகிருஷ்ணன் நகர் , அரியாங்குப்பம் கிழக்கு ஆகிய கிராம பஞ்சாயத்துக்குட்பட்ட 100 நாள் வேலை செய்யும் பெண்கள் 300 க்கும் மேற்பட்டோருக்கு சில்வர் அண்டா வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில், அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் ரூ. 3 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தனது சொந்த செலவில் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தொகுதி செயலாளர் ராஜா, தொகுதி துணை செயலாளர் சிவா, அம்மா பேரவை செயலாளர் ஜீவா, வார்டு செயலாளர்க ள் ஜெயக்குமார், பாலு, ரங்கநாதன், வார்டு துணை செயலாளர் அன்பு, எம்.ஜி.ஆர் மன்ற தொகுதி செயலாளர் சரவணன், காண்டீபன், செல்வம், ஜோதி, தொகுதி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.