ADDED : செப் 27, 2024 05:19 AM

புதுச்சேரி,: அ.தி.மு.க., முன்னாள் அவைத் தலைவர் பாண்டுரங்கன் பிறந்தநாள் விழா, அரியாங்குப்பம் தொகுதி பிரம்மன் சிலை அருகில் நடந்தது.
அ.தி.மு.க., மாநில பொருளாளர் ரவி பாண்டுரங்கன் தலைமை தாங்கி, ஏழை மாணவர்களுக்கு 5 சைக்கிள், சலவை தொழிலாளிகளுக்கு 3 சலவைப் பெட்டி, 3 தையல் மெஷின், 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு டிஜிட்டல் கைக்கடிகாரம் மற்றும் 300க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சேலை வழங்கினார்.
சிறப்பு அழைப்பளராக அ.தி.மு.க, செயலாளர் அன்பழகன், முன்னாள் எம்.எல்.ஏ., பாஸ்கர் ஆகியோர் பங்கேற்று நிர்வாகிகளுக்கு அ.தி.மு.க., உறுப்பினர் அட்டை வழங்கினார்.
நிகழ்ச்சியில், அவைத் தலைவர் அன்பானந்தம், நகர செயலாளர் அன்பழக உடையார், முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாராம், துணை செயலாளர் திருநாவுக்கரசு, கணேசன், குமுதன், ஜெ., பேரவை செயலாளர் சுத்துகேணி பாஸ்கர், தொகுதி செயலாளர்கள் ராஜா, பாஸ்கர், தொகுதி தலைவர் ராஜேந்திரன், பொதுக்குழு உறுப்பினர் பாலன், வார்டு செயலாளர்கள் பாலு, பன்னீர்செல்வம், சிவரவி, ஜெயக்குமார், ரங்கநாதன், ரமேஷ், பரசுராமன், தட்சணாமூர்த்தி, ஜீவா, சரவணன், ஆறுமுகம், ஏழுமலை, கோபி, திருசெல்வம், மணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.