/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
/
பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
ADDED : அக் 16, 2024 07:08 AM
புதுச்சேரி : பி.ஆர்.டி.சி., தினக்கூலி மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் செயற்குழு கூட்டம் அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன அலுவலகத்தில் நடந்தது.
சங்கத் தலைவர் அருள்மணி தலைமை தாங்கினார். சம்மேளனத்தின் கவுரவத் தலைவர் பிரேமதாசன், தலைவர் ரவிச்சந்திரன், பொது செயலாளர் ராதாகிருஷ்ணன், பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் சங்க ஆலோசகர்கள் பத்மநாபன், வேலையன் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில், பி.ஆர்.டி.சி., யில் கடந்த 14 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் மகளிர் நடத்துனர், 10 ஆண்டாக பணி செய்யும் ஒப்பந்த டிரைவர்கள், நடத்துனர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தொழிலாளர்துறை ஆணைப்படி குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். தீபாவளி போனாஸ் ரூ. 11 ஆயிரம் வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று காலை பி.ஆர்.டி.சி., தலைமை அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது.
செயலாளர் தமிழ்செல்வம் நன்றி கூறினார்.