/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் துவக்கம் நகர பஸ் சேவை பாதிக்கும் அபாயம்

ADDED : நவ 19, 2024 07:12 AM

புதுச்சேரி: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தினை துவக்கியுள்ளனர். இதனால் பஸ் சேவை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி பி.ஆர்.டி.சி., ஊழியர் சங்கம் மற்றும் பி.ஆர்.டி.சி., தினக்கூலி ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நேற்று துவங்கியது, பி.ஆர்.டி.சி., தலைமை அலுவலகம் அருகே நடந்த போராட்டத்திற்கு சங்க நிர்வாகி புண்ணியமூர்த்தி தலைமை தாங்கினார்.
நிர்வாகிகள் வேலய்யன், அருள்மணி, தமிழ் செல்வன், வடிவேல், திருமாறன், இரிசப்பன், விஜயராகவன் முன்னலை வகித்தனர். சம்மேளன நிர்வாகிகள் பிரேமதாசன், ரவிச்சந்திரன், ராதாகிருஷ்ணன், முனுசாமி கண்டன உரையாற்றினார்.
போராட்டத்தின்போது 14 ஆண்டுகள் பணிபுரிந்த மகளிர் நடத்துநர்கள், 10 ஆண்டுகள் பணி புரிந்த தினக்கூலி, ஒப்பந்த நடத்துநர், ஒட்டுநர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். ஏழாவது ஊதிய குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும். முழு நேர மேலாண் இயக்குநரை நியமிக்க வேண்டும். உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இரவிலும் போராட்டத்தினை தொடர்ந்தனர். இந்த போராட்டத்தால் நகர பகுதியில் பி.ஆர்.டி.சி., பஸ் சேவை இன்று 19 ம்தேதி முதல் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.