/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம்
/
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்தம்
ADDED : ஜூலை 28, 2025 01:47 AM
புதுச்சேரி: பணி நிரந்தரம் செய்ய கோரி, பி.ஆர்.டி.சி., சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட நடவடிக்கை குழுவினர், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
புதுச்சேரி, பி.ஆர்.டி.சி.,யில், ஒப்பந்த ஊழியர்கள் கடந்த 11 ஆண்டுகளாக பணி செய்து வருகின்றனர். அவர்களை பணி நிரந்தம் செய்யவும், 7வது ஊதியக்குழு அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பி.ஆர்.டி.சி., நிர்வாகம் ஊழியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தாமலும், எவ்வித நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருதால் பி.ஆர்.டி.சி., சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட நடவடிக்கை குழு சார்பில், கோரிக்கை நிறைவேற்றும் வரை, ஊழியர்கள் இன்று 28ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்த உள்ளனர்.