/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தமிழக தொழிற்சங்கத்திடம் ஆதரவு கேட்ட பி.ஆர்.டி.சி., ஊழியர்கள்
/
தமிழக தொழிற்சங்கத்திடம் ஆதரவு கேட்ட பி.ஆர்.டி.சி., ஊழியர்கள்
தமிழக தொழிற்சங்கத்திடம் ஆதரவு கேட்ட பி.ஆர்.டி.சி., ஊழியர்கள்
தமிழக தொழிற்சங்கத்திடம் ஆதரவு கேட்ட பி.ஆர்.டி.சி., ஊழியர்கள்
ADDED : ஆக 04, 2025 01:26 AM
புதுச்சேரி : தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள பி.ஆர்.டி.சி., ஊழியர்கள், தமிழக போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினரிடம் ஆதரவு கேட்டுள்ளனர்.
பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம், நிரந்தர ஊழியர்கள் 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையை அமல்படுத்த கோரி, கடந்த 28ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர். தொடர்ந்து, நேற்று 7வது நாளாக வேலை நிறுத்தத்தில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இதற்கிடையே, பி.ஆர்.டி.சி., தொழிற்சங்கத்தினர், தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினரிடம் தங்களது போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், தமிழக அரசு பஸ்கள் புதுச்சேரி எல்லையுடன் திரும்ப கோரிக்கை வைத்தனர்.