/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் போராட்டம் 'வாபஸ்'
/
பி.ஆர்.டி.சி., ஊழியர்கள் போராட்டம் 'வாபஸ்'
ADDED : ஏப் 11, 2025 04:13 AM

புதுச்சேரி: பி.ஆர்.டி.சி., ஒப்பந்த ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் பேச்சுவார்த்தைக்கு பின் வாபஸ் பெறப்பட்டதால், பஸ்கள் இன்று முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி சாலை போக்குவரத்து கழகம் (பி.ஆர்.டி.சி) மூலம் உள்ளூர் மற்றும் சென்னை, பெங்களூரு, குமுளி, நாகர்கோவில் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பி.ஆர்.டி.சி., யில் கடந்த 2015ம் ஆண்டு பணியமர்த்தப்பட்ட 276 ஒப்பந்த டிரைவர்கள் மற்றும் கண்டக்டர்கள் பணி நிரந்தரம் கோரி நேற்று முன்தினம் முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை துவங்கினர்.
இதனால் புதுச்சேரி அரசு பஸ்கள் பெரும்பாலானவை இயக்கப் படவில்லை. இந்நிலையில், நேற்று 2வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை போக்குவரத்து துறை ஆணையர் சிவக்குமாருடன் பேச்சு வார்த்தை நடத்த நேரு எம்.எல்.ஏ., ஏற்பாடு செய்தார்.
அதன்படி, போக்குவரத்து துறை அலுவலகத்தில் நேற்று மாலை நடத்த பேச்சுவார்த்தையில் பணி நிரந்தர கோரிக்கைகயை ஒரு மாத காலத்திற்குள் நிறைவேற்றுவதாக போக்குவரத்து நிர்வாகம் உறுதி அளித்தது.
இதற்கிடையே, நேரு எம்.எல்.ஏ.,வை தொடர்பு கொண்ட முதல்வர் ரங்கசாமி, ஊழியர்கள் போராட்டத்தை கைவிட்டு பஸ்களை இயக்கவும், இன்று காலை 10:00 மணிக்கு தன்னை சந்திக்குமாறு கூறினார்.அதன்பேரில், போராட்டக்குழு தலைவர் வேலையன், போராட்டத்தை வாபஸ் பெற்று, பஸ்களை இயக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.

