sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

புதுச்சேரி

/

 சுற்றுலா பயணிகளுக்கான இ-பஸ்கள் வழித்தடங்கள்: பி.ஆர்.டி.சி., மேலாண் இயக்குநர் வெளியீடு

/

 சுற்றுலா பயணிகளுக்கான இ-பஸ்கள் வழித்தடங்கள்: பி.ஆர்.டி.சி., மேலாண் இயக்குநர் வெளியீடு

 சுற்றுலா பயணிகளுக்கான இ-பஸ்கள் வழித்தடங்கள்: பி.ஆர்.டி.சி., மேலாண் இயக்குநர் வெளியீடு

 சுற்றுலா பயணிகளுக்கான இ-பஸ்கள் வழித்தடங்கள்: பி.ஆர்.டி.சி., மேலாண் இயக்குநர் வெளியீடு


ADDED : நவ 20, 2025 05:55 AM

Google News

ADDED : நவ 20, 2025 05:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி: சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கான இ-பஸ் வழித்தடங்களை பி.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ளது.

புதுச்சேரியில் அண்மையில் இ-பஸ் சேவை துவக்கப்பட்டது. தொடர்ந்து சுற்றுலா பயணிகள், மாணவர்கள், பொதுமக்களுக்கான இ-பஸ்கள் செல்லும் வழித்தடங்களை பி.ஆர்.டி.சி., வெளியிட்டுள்ளது.

இது குறித்து பி.ஆர்.டி.சி., மேலாண் இயக்குநர் சிவக்குமார் செய்திக்குறிப்பு:

சுற்றுலா பயணிகளை பொருத்தவரை புது பஸ் ஸ்டாண்டில் இருந்து 6-இ.பி., 6-இ.ஏ, 10-இ.பி., 10, இ.ஏ., 7-இ, 13-இ., 17-இ.ஏ., 17-இ.பி., 19.இ, 20-இ, 3-இ.ஏ., 3-இ.பி., 14-இ, ஆகிய எண் கொண்ட ஏ.சி., பஸ்கள் புது பஸ் ஸ்டாண்டில் இருந்து பல்வேறு சுற்றுலா தலங்களை இணைக்கும் வகையில் விடப்பட்டுள்ளது.

6-இ.ஏ., 6-இ.பி., எண் கொண்ட இ-பஸ்கள் புதுச்சேரி பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு சின்னவீராம்பட்டினத்தை சென்றடையும். இந்த பஸ், அரிக்கமேடு, ஈடன்பீச், அரபிந்தோ ஆசிரம், பாரதி பூங்கா, மெரினா பீச், தாவரவியல் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா தலங்களை இணைக்கும்.

10-இ.ஏ., 10-இ.பி., சுற்றுலா இ-பஸ் புது பஸ் ஸ்டாண்ட்டில் இருந்து கோரிமேடு, ஜிப்மர், ஆரோவில், கோட்டக்குப்பம் வழியாக செல்லும். இதில் சென்றால் ஆரோவில், ஆரோ பீச்சினை பார்க்கலாம்.

அடுத்து 6-இ.ஏ., 6-இ.பி., 7-இ, 13-இ, 17-இ.பி., 19.இ, 20-இ, வழித்தட இ-பஸ்கள், புது பஸ் ஸ்டாண்டில் இருந்து புறப்பட்டு அரியாங்குப்பம், நோணாங்குப்பம் வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இந்த இ-பஸ்சில் சென்றால் சுண்ணாம்பாறு படகு குழாமினை அடைந்து படகு சவாரி செய்யலாம்.

3-இ.ஏ., 3-இ.பி., 14-இ., வழித்தட இ.பஸ்., முத்திரையர்பாளையம், பத்துக்கண்ணு வழியாக ஊசுடு ஏரியை காணும் வகையில் இயக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us