/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., மினி பஸ்கள் இயக்கம்; முதல்வருக்கு முன்னாள் எம்.எல்.ஏ., நன்றி

ADDED : மார் 02, 2024 06:23 AM
புதுச்சேரி : புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் பொதுமக்களின் சிரமத்தை போக்கும் வகையில் பி.ஆர்.டி.சி., மினி பஸ்களை இயக்க உத்தரவிட்ட முதல்வருக்கு முன்னாள் எம்.எல்.ஏ., கோபிகா நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் கண்டமங்கலத்தில் ரயில்வே மேம்பாலம் கட்டுமான பணி தற்போது நடந்து வருகின்றது. இதனால் புதுச்சேரி-விழுப்புரம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால், மாற்று வழியாகவும் வாகனங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, மதகடிப்பட்டு, திருபுவனை, திருவண்டார்கோவில் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்தவர்கள் வாகன வசதியின்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, இப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்கள், மாணவ மாணவிகள் பாதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து முதல்வர் ரங்கசாமியி கவனத்திற்கு கொண்டு சென்றேன்.
அதை தொடர்ந்து, நேற்று முதல் இரண்டு பி.ஆர்.டி.சி., மினி பஸ்கள் கண்டமங்கலத்தில் இருந்து மதகடிப்பட்டு வரையிலும், மதகடிப்பட்டில் இருந்து மீண்டும் கண்டமங்கலம் வரையிலும் இயக்கப்பட்டு வருகின்றது.
மினி பஸ்களை இயக்க உத்தரவிட்ட முதல்வர் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.