/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பி.ஆர்.டி.சி., சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட நடவடிக்கை குழு துவக்கம்

ADDED : ஜூலை 04, 2025 02:20 AM
புதுச்சேரி: பி.ஆர்.டி.சி., சங்கங்களின் ஒருங்கிணைந்த கூட்டு போராட்ட நடவடிக்கைக்குழு துவங்கப்பட்டுள்ளது.
பி.ஆர்.டி.சி.யில் 11 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்கள் பணி நிரந்தரம், 7 வது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். இதுவரை எந்த கோரிக்கையும் நிறைவேற்றப்படவில்லை.
இந்நிலையில், பி.ஆர்.டி.சி., அனைத்து தொழிற்சங்கங்களையும் ஒருங்கிணைத்து கூட்டுப் போராட்ட நடவடிக்கைக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
குழுவின் அமைப்பாளராக பாலகிருஷ்ணன், அமைப்பு செயலாளர்களாக கருணாமூர்த்தி, ஜெயசீலன், பாபு கிருஷ்ணன், ரமேஷ், தலைவராக ராஜேந்திரன், துணைத் தலைவர்களாக தேவநாதன், முத்துகுமரப்பன், பிரதீஷ்குமார், புருேஷாத்தமன், பொதுச்செயலாளர் வேலய்யன், செயலாளர் ராஜசேகரன், துணைச் செயலாளர்களாக திருகுமரன், வடிவேலு, சங்கர், தமிழ்ச்செல்வம், திருநாவுக்கரசு, பொருளாளராக டேனியல் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டு போராட்டக்குழு சார்பில் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முதல்வர், தலைமை செயலர், துறை செயலர், மேலாண் இயக்குநர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அதனை நிறைவேற்றவில்லை எனில் வேலை நிறுத்த போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.