பி.எஸ்., அப்போலோ சிறப்பு நிபுணர் புதுச்சேரிக்கு 25ம் தேதி வருகை
பி.எஸ்., அப்போலோ சிறப்பு நிபுணர் புதுச்சேரிக்கு 25ம் தேதி வருகை
ADDED : ஏப் 22, 2026 10:27 PM
புதுச்சேரி: சென்னை அப்போலோ மருத்துவமனை நுரையீரல் நிபுணர் புதுச்சேரிக்கு வரும் 25ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
புதுச்சேரி எல்லைபிள்ளைச்சாவடி, 100 அடி ரோடு, என்.டி.மகால் எதிரில் அப்போலோ மருத்துவமனை தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்திற்கு அப்போலோ மருத்துவமனை சிறப்பு நுரையீரல் நிபுணர் ஸ்ரீனிவாஸ் ராஜகோபாலா வரும் 25ம் தேதி வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.
இதில் மூச்சு திணறல், இருமல், மார்பு வலி, சளி உற்பத்தி, சத்தம் தரும் மூச்சு, சளியில் ரத்தம், பகல் துாக்கம் அதிகரித்தல், துாங்கும் போது அதிகரித்த குறட்டை, துாசி ஒவ்வாமை, நுரையீரல் தொற்று, நுரையீரலில் நீர் அல்லது சீழ், காசநோய், நிமோனியா, துாக்கமின்மை, சுவாச கோளாறுகள், நுரையீரல் மற்றும் காற்று பாதைகளின் உட்புற பரிசோதனை போன்ற பிரச்னைகளுக்கு ஆலோசனை வழங்க உள்ளார். காலை 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஆலோசனை வழங்கப்படுகிறது. முன்பதிவிற்கு 0413-4901083, 99446 63139, 82487 53248, எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
