ADDED : செப் 21, 2024 12:34 AM

நாகப்பட்டினம்: நாகையில், சமூக நலத்துறையின் கீழ் அன்னை சத்யா அரசு ஆதரவற்ற முதியோர் மற்றும் குழந்தைகள் காப்பகம் உள்ளது. இங்கு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் பெற்றோரை இழந்த 10 வயதுக்குட்பட்ட 3 சிறுவர்கள் உட்பட 55 சிறுமிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றனர்.
பெண் குழந்தைகளுக்கு நல்ல தொடுதல், கெட்ட தொடுதல் வெளி நபர்கள் அணுகுமுறை குறித்து ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ்,42; ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் குழந்தைகள் நல குழுவிடம், 5 மாணவியர், சத்ய பிரகாஷ் தங்களிடம் பாலியல் ரீதியாக பேசுவதாக புகார் தெரிவித்தனர். இதுகுறித்து காப்பக கண்காணிப்பாளர் சசிகலா அளித்த புகாரின் பேரில், நாகை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேம்பரசி மற்றும் போலீசார், போக்சோ பிரிவில் வழக்கு பதிந்து, சத்யபிரகாஷை கைது செய்தனர்.