பெண்ணின் உள்ளாடைகள் திருடி செல்லும் சைகோவால் பரபரப்பு
பெண்ணின் உள்ளாடைகள் திருடி செல்லும் சைகோவால் பரபரப்பு
ADDED : செப் 23, 2026 08:43 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: பெண்ணின் உள்ளாடைகளை திருடி சென்ற சைகோ நபர் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதலியார்பேட்டை சிங்கிலி நாயக்கர் வீதியில் உள்ள 12க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ளன. அதில், 5 வீடுகளின் மட்டும் மக்கள் வசிக்கின்றனர். அங்குள்ள ஒரு பெண் வீட்டில், காயவைக்கப்பட்டிருந்த பெண்ணின் உள்ளாடைகள் சமீபகாலமாக காணாமல் போயின.
சந்தேகமடைந்த அந்த பெண், தனது பக்கத்தில் உள்ள பாழடைந்து இருக்கும் வீட்டில் சென்று பார்த்தார். அங்கு, பெண்களின் உள்ளாடைகள் ஆணியில் மாட்டியும், சில உள்ளாடைகள் கீழே கிடந்திருந்தது.
இதுகுறித்து, அந்த பகுதியில் வசிப்பவர்கள் போலீசாரிடம் தெரிவித்ததை அடுத்து, போலீசார் உள்ளாடைகளை திருடி செல்லும் சைகோ நபர் யார் என விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
