/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பட்டாசு விற்கும் புதுச்சேரி போலீஸ் பொதுமக்களும் வாங்கலாம்
/
பட்டாசு விற்கும் புதுச்சேரி போலீஸ் பொதுமக்களும் வாங்கலாம்
பட்டாசு விற்கும் புதுச்சேரி போலீஸ் பொதுமக்களும் வாங்கலாம்
பட்டாசு விற்கும் புதுச்சேரி போலீஸ் பொதுமக்களும் வாங்கலாம்
ADDED : அக் 26, 2024 06:24 AM

புதுச்சேரி: புதுச்சேரி போலீஸ் நலச்சங்க ஷில்பி கடையில் பட்டாசு விற்பனையை போலீசார் துவக்கி உள்ளனர்.
புதுச்சேரி போலீஸ் நலனுக்காக துவக்கப்பட்ட போலீஸ் நலச்சங்க ஷில்பி ஷாப், கோரிமேடு போலீஸ் மைதானம் அருகில் இயங்கி வருகிறது.
இங்கு, போலீசாருக்கு தேவையான சீருடை, தொப்பி உள்ளிட்ட பொருட் கள் விற்பனை செய்கின்றனர்.
தீபாவளி பண்டிகை முன்னிட்டு போலீசார் பயன்பெறும் வகையில் ரூ. 2000 மதிப்புள்ள பட்டாசு பாக்ஸ்களை மொத்தமாக வாங்கி, ரூ. 1200க்கு போலீசுக்கு மட்டும் விற்பனை செய்தனர்.
பொதுமக்களின் வேண்டுகோளை ஏற்று நேற்று முதல் பட்டாசு பாக்ஸ்கள் பொதுமக்களுக்கும் விற்பனை துவங்கப்பட்டது. எஸ்.பி., ரங்கநாதன் பொதுமக்களுக்கான விற்பனையை துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், இனியன், ரமேஷ், ரகுபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.